பேராசிரியர் டாக்டர் கலைமாமணி அரங்க முருகையன், டாக்டர் சித்ரா, டாக்டர் லட்சுமிதத்தை ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாராட்டிய காட்சி.
மோட்டார் சைக்கிளில் பயணம் சென்ற வாலிபருக்கு பாராட்டு
- 44 நாட்கள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
- 1 கோடி விதைப்பந்துகள் வழங்கினார் பல்வேறு மாநிலங்களில் அந்த விதை பந்துகள் நடப்பட்டது.
புதுச்சேரி:
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் உள்ள மலேசிய பல்கலைக் கழகத்தில் 3 நாட்கள் நடந்தது.
இதில் புதுவையில் இருந்து கலந்துகொண்ட பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்துரு (வயது 26) புதுவை யில் இருந்து காஷ்மீர் லடாக் வரை 44 நாட்கள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
சுற்றுப்புற சூழலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 கோடி விதைப்பந்துகள் வழங்கினார் பல்வேறு மாநிலங்களில் அந்த விதை பந்துகள் நடப்பட்டது. இதனை பாராட்டி நினைவு பரிசு கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மலேசிய தலைவர் டத்தோ ஓம்ஸ் தியாகராஜன், உலகத் தமிழ் பண்பாட்டு மைய தலைவர் சண்முகம், மலேசிய நண்பர்கள் அமைப்பு செய லாளர் பொன்பெருமாள், புதுச்சேரி பேராசிரியர் டாக்டர் கலைமாமணி அரங்க முருகையன், டாக்டர் சித்ரா, டாக்டர் லட்சுமிதத்தை ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாராட்டினர்.