புதுச்சேரி

நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. 

கே.எஸ்.கே சேகர் ரெட்டியார் நினைவு தினம்

Published On 2023-04-30 13:16 IST   |   Update On 2023-04-30 13:16:00 IST
  • ரெட்டியாரின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
  • ராஜா, பெருமாள், சக்திவேல், விஜயன்,ரஞ்சித், அங்காளன், தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கே.எஸ்.கே சேகர் ரெட்டியார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆன இவர் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென இறந்தார்.

அவரது 2-ம் ஆண்டு நினைவஞ்சலி கூடப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. ஊசுடு தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர்பாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.கே சேகர் ரெட்டியாரின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் சேந்தநத்தம் பகுதியில் உள்ள சந்தோஷ் நண்பன் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கூடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கே.எஸ்.கே சேகர்ரெட்டியார் நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநில காங்கிரஸ் செயலாளர் கோனேரி லோகையன், மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் குமார், குகா, எஸ்சி.எஸ்டி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சேட்டு என்கிற செங்கேனி, மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்வபிரியன், ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜா, சுப்பான், தமிழ், லோகநாதன், சிவபாலன், ராஜா, பெருமாள், சக்திவேல், விஜயன்,ரஞ்சித், அங்காளன், தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News