குழாய் சீரமைப்பு பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.
குழாய் சீரமைப்பு பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி டாக்டர் அம்பேத்கர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது.
- தண்ணீர் தொட்டியின் மூலம் தான் இக்கழிவறைக்கு பொதுமக்கள் பயன்படுத்த தண்ணீர் வினியோகம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி டாக்டர் அம்பேத்கர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது.
அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கழிவறை மூலம் வெளியேறும் கழிவு நீர் செல்லும் குழாய் உடைந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கையின் படி உடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் ரவிக்குமார், ராகேஷ், ராஜ பிரபாகரன் உடன் இருந்தனர்.
மேலும் 6 மாதம் காலத்திற்கு முன்பு கழிவறை அருகாமையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தில் தண்ணீர் சேகரிப்பு தொட்டி இயங்காமல் கிடந்தது.
தண்ணீர் தொட்டியின் மூலம் தான் இக்கழிவறைக்கு பொதுமக்கள் பயன்படுத்த தண்ணீர் வினியோகம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதன் அருகாமையில் உள்ள பாழடைந்த பள்ளிக்கூடத்தில் உள்ள இலவம்பஞ்சு மரத்தை மக்களின் கோரிக்கையை ஏற்று அப்புறப்படுத்தி மேலும் அங்கு இளைஞர்கள் விளையாட இடத்தை சுத்தம் செய்து கொடுத்தார்.