புதுச்சேரி

சரக்கு கப்பலில் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

பெரிய அளவிலான சரக்கு கப்பலில் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-08-09 12:06 IST   |   Update On 2023-08-09 12:06:00 IST
  • அதிக சரக்கு கப்பல்கள் வந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும்.
  • கிளை செயலாளர் ராகேஷ், தொகுதி இளைஞரணி மரி ஆகியோர் உடனிருந்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாக சரக்கு கப்பல் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  பெரிய அளவிலான சரக்கு கப்பல் துறைமுகத்துக்கு வந்தது.

இதுகுறித்து அறிந்த உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. துறைமுகத்துக்கு நேரில் சென்று சரக்கு கப்பலை ஆய்வு செய்தார். அப்போது கப்பல் கேப்டன், துறைமுக செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது கென்னடி எம்.எல்.ஏ. கூறும்போது, இதுபோல் அதிகப்படியாக சரக்கு கப்பல் போக்குவரத்து சென்று வந்தால் அரசுக்கும் லாபம், தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அமையும். மேலும் அதிக சரக்கு கப்பல்கள் வந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றார்.

ஆய்வின்போது, தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ஆரோக்கியராஜ், கிளை செயலாளர் ராகேஷ், தொகுதி இளைஞரணி மரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News