புதுச்சேரி

தவளக்குப்பத்தில் வாப்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான ஜூட் பைகள் மற்றும் துணி பைகள் தயாரிப்பதற்கான பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.

வாப்ஸ் நிறுவனம் சார்பில் ஜூட், துணி பைகள் தயாரிப்பு பயிற்சி நிறைவு விழா

Published On 2023-08-04 14:15 IST   |   Update On 2023-08-04 14:15:00 IST
  • தையல் பயிற்சி முகாம் 30 நாட்கள் நடக்கிறது. அதற்கான தொடக்க விழாவும் நடைபெற்றது.
  • நிறைவு விழாவில் வாப்ஸ் நிறுவன செயலாளர் அருள் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வாப்ஸ் நிறுவனம் சார்பில் தவளக்குப்பத்தில் பெண்களுக்கான ஜூட் பைகள் மற்றும் துணி பைகள் தயாரிப்பதற்கான ஒரு மாத பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதற்கான நிறைவு விழாவில் வாப்ஸ் நிறுவன செயலாளர் அருள் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சென்னை சிட்பி வங்கி பொது மேலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் சிட்பி வங்கி புதுச்சேரி கிளை உதவி பொது மேலாளர் பாஸ்கர், ஓய்வு பெற்ற மாவட்ட தொழில் மைய துணை இயக்க மேலாளர் அரங்கநாதன், புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி சேர்மன் கணேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவிற்கு வந்தவர்களை வாப்ஸ் ஒருங்கிணைப்பாளர் சாந்திசீதாராமன் வரவேற்றார். இந்த பயிற்சி முகாமில் சுமார் 35 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான தையல் பயிற்சி முகாம் 30 நாட்கள் நடக்கிறது. அதற்கான தொடக்க விழாவும் நடைபெற்றது.

முடிவில் ஒருங்கிணைப்பாளர் கருப்பையா நன்றி கூறினார். 

Tags:    

Similar News