புதுச்சேரி

கோப்பு படம்.

பேரிடர்கால நிவாரண உதவித்தொகை உயர்வு

Published On 2023-11-14 05:22 GMT   |   Update On 2023-11-14 05:22 GMT
  • இயற்கை சீற்றங்களின்போது பாதிக்கப்படும் குடும்பங்கள் நிலைகுலைந்து விடுகின்றன.
  • இந்த தொகை ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

சுனாமி, கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது பாதிக்கப்படும் குடும்பங்கள் நிலைகுலைந்து விடுகின்றன.

இவர்களுக்கு பேரிடர் துறை மூலம் நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் ரூ.4 லட்சத்தில் எந்த மாற்றமும் இல்லை. கை, கண், உறுப்பு 40 முதல் 60 சதவீத பாதிப்படைந்தால் ரூ.59 ஆயிரத்து 100, 60 சதவீதத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த தொகை ரூ.74 ஆயிரம், ரூ.2. ½ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்து ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றால் ரூ.12 ஆயிரத்து 700 வழங்கப்பட்டது. இந்த தொகை ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு குறைவாக சிகிச்சை பெற்றால் வழங்கப்பட்ட ரூ.4 ஆயிரத்து 300, ரூ.5 ஆயிரத்து 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உடைமைகளை இழக்கும் குடும்பத்துக்கு ரூ.ஆயிரத்து 800, வீட்டு பொருட்களை இழந்தால் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை தலா ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டு ள்ளது.

 முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.1.20 லட்சம், குடிசை வீடுகளுக்கு ரூ.1.30 லட்சம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500, குடிசைகளுக்கு ரூ.4 ஆயிரம், குடில்களுக்கு ரூ.8 ஆயிரம் நிவாரண தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால்நடை ஷெட் இழந்தால் ரூ.3 ஆயிரம், பசு, எருமை இறந்தால் ரூ.37 ஆயிரத்து 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், இழுவை மாடுகளுக்கு ரூ.32 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தோட்டக்கலை ஓராண்டு பயிர்களுக்கு 2.5 ஏக்கருக்கு ரூ.8 ஆயிரத்து 500, பல்லாண்டு பயிர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 500, செரிக்கல்சருக்கு ரூ.6 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட நிவாரண தொகை உடனடியாக அமலுக்கு வருவதற்கான அரசாணை யும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News