புதுச்சேரி
மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட காட்சி.
அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை
- அரசு தொடக்கப்பள்ளியில் 220-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 220-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி மாண வர்களுக்கு அடையாள அட்டை, டைரி, கற்றலில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் முன்னாள் மாணவர் காவல்துறை அதிகாரி ராஜசேகர் மாணவர்களுக்கு அடையாள அட்டை, டைரி மற்றும் பரிசுகளை வழங்கினார்.
மாநில அளவில் வாசிப்பு மற்றும் கையெழுத்து போட்டி, கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி விழாவுக்கு தலைமை வகித்தார். ஆசிரியர் பாரதிராஜா வரவேற்றார். ஆசிரியை கீதா நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் எழிலரசி, அவந்தி, தேவி, அழகம்மாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.