மாணவர்கள் அமைத்த மூலிகை தோட்டத்தை செல்வகணபதி எம்.பி.திறந்து வைத்த காட்சி.
மாணவர்கள் அமைத்த மூலிகை தோட்டம்
- செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார்
- அசோலா வளர்ப்பு மற்றும் மண் உரம் தயாரித்தல் ஆகிய வற்றை செல்வகணபதி எம்.பி. பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.
புதுச்சேரி:
தவளகுப்பத்தில் பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் வேளாண் பண்ணையில் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்கள் அடங்கிய மூலிகை தோட்டத்தை அமைத்துள்ளனர்.
இந்த மூலிகை தோட்டத்தை செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார். திறந்து வைத்து மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
மேலும் அங்கு மரக்கன்றுகளையும் நட்டார். தொடர்ந்து மாணவர்கள் ஏற்படுத்திய 20-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட தாவரங்கள் அடங்கிய பயிற்திட்டமிடல், காலான் வளர்பு, அசோலா வளர்ப்பு மற்றும் மண் உரம் தயாரித்தல் ஆகிய வற்றை செல்வகணபதி எம்.பி. பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.
அப்போது அவர் பேசிய போது மருத்துவ குணங்கள் அடங்கிய தாவரங்களை வளர்ப்பு மட்டுமில்லாமல் அதன் பயன்களையும் அறிந்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எடுத்துறைத்தார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகைதந்த செல்வகணபதி எம்.பி.யை கல்லூரியின் தாளாளர் அக்ரிகணேஷ் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ரமேஷ், சுரேஷ், உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபஸ்ரீ , மணி கண்டன், காரல்மார்க்ஸ், ஜெயசவிதா, வினிதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.