கோப்பு படம்.
போதையில் மோட்டார் சைக்கிளை இழந்த என்ஜினீயரிங் கல்லூரி ஊழியர்
- போதை அதிக மானதால் அருகில் உள்ள காலி இடத்தில் தூங்கிவிட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
புதுச்சேரி:
காலாப்பட்டு அருகே பிள்ளைச்சாவடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கி ருஷ்ணன் (வயது 42) இவர் அங்குள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.
சம்பவத்தன்று இரவு பணி முடிந்து முத்துக்கிருஷ்ணன் கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மதுக்கடைக்கு மதுகுடிக்க சென்றார். தனது மோட்டார் சைக்கிளை மதுக்கடை எதிரே நிறுத்திவிட்டு மது குடித்தார். பின்னர் போதை அதிக மானதால் அருகில் உள்ள காலி இடத்தில் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணா மால் திடுக்கிட்டார்.
யாரோ மர்ம நபர்கள் முத்துக்கிருஷ்ணன் போதையில் படுத்து தூங்கு வதை பயன்படுத்தி அவரது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து முத்துக்கிருஷ்ணன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்