புதுச்சேரி
கோப்பு படம்.
கவர்னர் தமிழிசை புத்தாண்டு வாழ்த்து
- தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பிறருக்கு உதவி செய்து, நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்ற உறுதியேற்று தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலைக்கவும், இன்பமும் மகிழ்ச்சியும் பெருகவும், ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.
அனைவரும் மகிழ்ச்சியோடு, பிறருக்கு உதவி செய்து, நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்ற உறுதியேற்று தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.