புதுச்சேரி

கோப்பு படம்.

குருவாலயா ஆண்கள் அணி முதலிடம் - கலெக்டர் கேடயம் வழங்கினார்

Published On 2023-06-13 11:30 IST   |   Update On 2023-06-13 11:30:00 IST
  • குருவாலயா ஸ்போர்ட்ஸ் புரோ மோஷனல் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் முதியோர் குழு பேட்மின்டன் போட்டி நடந்தது.
  • இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 விளையாட்டு மையங்களில் இருந்து 80 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

கவுண்டம்பாளையம் அம்பாள் நகரில் குருவாலயா ஸ்போர்ட்ஸ் புரோ மோஷனல் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் முதியோர் குழு பேட்மின்டன் போட்டி நடந்தது.

இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 விளையாட்டு மையங்களில் இருந்து 80 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். இதில் பெண்கள் அணியில் முதலிடத்தை எக்ஸ்மேயர் அணியும், 2-ம் இடத்தை குருவாலயா ஏ அணியும், 3-ம் இடத்தை குருவாலயா பி மற்றும் லோட்டஸ் அணிகள் பெற்றன.

ஆண்கள் பிரிவில் முதலிடத்தை குருவாலயா ஏ அணியும், 2-ம் இடத்தை எப்-2 பி காரைக்கால் அணியும், 3-ம் இடத்தை சாய் ஏ அணி மற்றும் பி.எஸ்.பி.சி. அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயத்தை கலெக்டர் வல்லவன், ஓய்வுபெற்ற ஐ.ஜி. சந்திரன், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர். மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி வரவேற்றார். குருவாலாயா விளையாட்டு மைய உரிமையாளர் சாந்தி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News