கோப்பு படம்.
கூடுதல் மின் மயானங்களை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-வெங்கடேசன் எம்.எல்.ஏ. கோரிக்கை
- புதுவை போக்குவரத்து துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட் டுள்ளது.
- கலை பண்பாட்டு துறையை பொறுத்தவரை அங்கு பணியாற்றுகின்ற லைப்ரரி பணியாளருக்கு ஊதியம் அதிகம் என கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் பேசியதாவது:-
புதுவை போக்குவரத்து துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட் உரையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சரும் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக பிங்க் பஸ்கள் பெண்களுக்காக இலவசமாக அனைத்து பகுதிகளிலும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். கலை பண்பாட்டு துறையை பொறுத்தவரை அங்கு பணியாற்றுகின்ற லைப்ரரி பணியாளருக்கு ஊதியம் அதிகம் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே பல லைப்ரரி பணியாளர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிகிறது.
எனவே எதிர்காலத்தில் நமது ஆட்சி காலத்தில் இது போன்ற ஒரு நிலை மாற்றப்பட்டு அனைத்து நூலகங்களிலும் புத்தகங்கள் வாங்க வேண்டும். மேலும் இங்கு படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு, ஆண்டு தோறும், பல்வேறு கலைத்துறையினரை வரவைத்து சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி இங்கிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு முக்கிய கலை நிறுவ னங்களில் பணி கிடைக்கக்கூடிய வழிவகைகளை செய்து தர வேண்டும்.
ஆதிதிராவிட நலத் துறையை பொறுத்தவரை அங்கு பணம் கொடுத்தால் தான் பட்டா என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை காண்கிறோம். மேலும் புதுவை இடுகாடுகளில், இறுதி சடங்குகள் செய்வதற்கு பத்தாயிரம், பதினைந்தாயிரம் ரூபாய் அளவிற்கு கூட பணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.
அதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று புதுவையில் மின் மயானங்கள் போதுமான தாக இல்லை என்று தெரிகிறது. கூடுதல் மின் மயானங்களை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.