கல்வித்துறையை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
கல்வித்துறையை முற்றுகையிட்டு அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
- சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி இல்லை என ஆசிரியர்களிடம் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
- கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை காராமணி குப்பத்தில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் வழங்க படும் மதிய உணவு தரமானதாக இல்லை. சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி இல்லை என ஆசிரியர்களிடம் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். ஆனால் கோரிக்கைகள் சரி செய்யப்படவில்லை. இதையடுத்து மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளியிலிருந்து ஊர்வலமாக கிளம்பி இந்திராகாந்தி சிலை அருகே வந்தனர். அங்குள்ள கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ஆசிரியர்கள் அங்கு வந்து மாணவர்களிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.