கோப்பு படம்.
அரசு கல்லூரி பேராசிரியர் மயங்கி விழுந்து சாவு
- சிவசங்கரி புதுவையில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.
- முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
அரசு கல்லூரி பேராசிரியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுவை உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கலைகந்தன்(வயது37). இவருக்கு சிவசங்கரி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கலைகந்தன் சென்னையில் தங்கி அரசு கலைக்கல்லூரி யில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார். சிவசங்கரி புதுவையில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். வார விடுமுறையில் கலைகந்தன் மனைவி மற்றும் குழந்தை களை பார்க்க வருவது வழக்கம்.
அதுபோல் நேற்று முன்தினம் கலைகந்தன் குடும்பத்தினரை பார்க்க வீட்டுக்கு வந்தார். நேற்று காலை கலைகந்தன் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென கலைகந்தன் மயங்கி சாய்ந்தார்.
உடனே இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சிவசங்கரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு கார் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலைகந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கலைகந்தன் திடீர் நெஞ்சுவலியால் இறந்து போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி சிவசங்கரி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.