புதுச்சேரி

கோப்பு படம்.

விமான நிலைய அதிகாரியை தாக்கிய கஞ்சா கும்பல்

Published On 2023-08-16 13:42 IST   |   Update On 2023-08-16 13:42:00 IST
  • ராஜீவ் காந்தி சிக்னலில் பரபரப்பு
  • கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் டீக்கடையில் இருந்த பாத்தி ரத்தால் கிருஷ்ணகுமாரின் தலையில் தாக்கினர்.

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு குருநகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 30). இவர் திருப்பதியில் உள்ள ஏர்போர்ட்டில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் 9-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

2 நாள் விடுமுறைக்காக நேற்று இரவு திருப்பதியில் இருந்து பஸ்சில் இன்று அதிகாலை புதுவை வந்தார். புதுவை ராஜீவ் காந்தி சிக்னலில் இறங்கிய கிருஷ்ணகுமார் தனது தம்பி செல்வகுமாருக்கு போன் செய்து பைக் எடுத்து வரும்படி கூறியுள்ளார்.

தம்பிக்காக காத்திருந்த கிருஷ்ணக்குமாரிடம் அங்கு கஞ்சா போதையில் வந்த 2 இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர்.

கிருஷ்ணகுமார் அங்கிருந்து விலகி அங்குள்ள டீ கடைக்கு சென்று உள்ளார்.

தொடர்ந்து வந்த 2 பேரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த தம்பி செல்வக்குமாரிடம் நடந்தவற்றை கிருஷ்ண குமார் கூறியுள்ளார்.

அந்த 2 வாலிபர்களிடமும் சென்று செல்வகுமார் தட்டிக் கேட்கவே அந்த 2 பேரும் செல்வக்குமாரை தாக்கி உள்ளனர். தம்பியை தாக்குவதை பார்த்த கிருஷ்ணகுமார் அதனை தடுத்து நிறுத்த முயன்ற போது கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் டீக்கடையில் இருந்த பாத்தி ரத்தால் கிருஷ்ணகுமாரின் தலையில் தாக்கினர்.

இதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமார் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News