புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ரூ. 10 ஆயிரம் ரூபாய் காசோலையை 5 பள்ளிவாசல்களுக்கு வழங்கிய காட்சி.

பள்ளிவாசல்களுக்கு நிதி-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-04-12 11:10 IST   |   Update On 2023-04-12 11:10:00 IST
உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பள்ளிவாசல்களுக்கு தனித்தனியாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் வழங்கினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குத்பா பள்ளி முஹம்மதியா பள்ளி, முவஹீதியா பள்ளி மிராபள்ளி,பூராப் பள்ளி ஆகிய பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி நன்கொடை முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பள்ளிவாசல்களுக்கு தனித்தனியாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில வக்பு வாரிய உறுப்பினர்கள் சையத் அஹமது மெய்தீன், பசிலா பாத்திமா, வக்பு அதிகாரி முஹம்மது இஸ்மாயில், மீராபள்ளி முத்தவல்லி ஹாஜாமெய்தீன் முஹமதியா பள்ளி முத்தவல்லிகள், ஷேக் அப்துல் கப்பார்திரு முஹம்மது ரஃபி, முவஹிதியா பள்ளி முத்தவல்லி, முஹம்மது அமீன், பூரா பள்ளி முத்தவல்லி , முஹம்மது முசாதிக் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News