புதுச்சேரி

பயிற்சி வகுப்பை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பயிற்சி நூல்களை வழங்கிய காட்சி. அருகில் சிவசங்கரன் எம்.எல்.ஏ. உள்ளார்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச போட்டி பயிற்சி வகுப்பு

Published On 2023-08-23 13:38 IST   |   Update On 2023-08-23 13:38:00 IST
  • அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்
  • ஒரு வருட கால போட்டித்தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளுக்கான பயிற்சியினை அளித்து வருகிறது.

புதுச்சேரி:

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னருக்கான தேசிய வாழ்வாதார மையம் தனியார் பயிற்சி நிறுவனம் வாயிலாக ரூ.1000-ம் மாத உதவித் தொகையுடன் கூடிய ஒரு வருட கால போட்டித்தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளுக்கான பயிற்சி யினை அளித்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகளை போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுக்கு இலவச போட்டித்தேர்வு பயிற்சி நூல்களை வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன், மைய ஒருங்கி ணைப்பாளர் கோட்டூர்சாமி, குளோபல் பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்க டேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News