புதுச்சேரி

அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் இலவச சைக்கிள் வழங்கிய காட்சி.

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Published On 2023-04-18 14:59 IST   |   Update On 2023-04-18 14:59:00 IST
  • பள்ளி முதல்வர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
  • சைக்கிள் வழங்கும் விழா நடந்தது

புதுச்சேரி:

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக திட்டம் நிறுத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வந்த இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மங்களம் தொகுதி கணுவாப்பேட்டை பகுதி யில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி முதல்வர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தன செல்வன் நேரு முன்னிலை வகித்தார்.

அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மாணவர்க ளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.அதன்படி 9-ம் வகுப்பு மாணவர்கள் 53 பேருக்கு இலவச சைக்கிளும், 7-ம் வகுப்பு மாணவர்கள் 41 பேருக்கு இலவச யோகா மேட்டும், 2ம் வகுப்பு மாணவர்கள் 16 பேருக்கு இலவச துண்டும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News