புதுச்சேரி

கோப்பு படம்.

மத்திய அரசு ஊழியர் என மோசடி

Published On 2023-04-26 08:12 GMT   |   Update On 2023-04-26 08:12 GMT
  • சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
  • இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள், மத்திய அரசில் பணிபுரிகின்றேன்.

புதுச்சேரி:

இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மோசடிகளும் அதிகரித்துள்ளது. வித்தியாசமான முறையில் மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர். நான் மத்திய அரசில் பணிபுரிகிறேன். எனக்கு மாறுதல் உத்தரவு வந்துவிட்டது.

எனவே என் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்ய உள்ளேன் என தகவல் வந்தால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என புதுவை சைபர் கிரைம் போலீசார் வேண்டு கோளை வைத்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது: -

பழைய புதிய பொருட்களை வாங்க விற்க உதவும் உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள், மத்திய அரசில் பணிபுரிகின்றேன். எனக்கு மாறுதல் வந்து விட்டதால் நான் அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும்.

மேற்கண்ட பொருட்களை விற்க உள்ளேன் என புகைப்படங்களுடன் கூடிய விளம்பரங்களை வெளியி டுகின்றனர். அவர்களை தொடர்பு கொண்டால் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்ளை ரூ.90 ஆயிரத்துக்கு தருகிறேன் என கூறுகின்றனர். இதற்கு முன்பணமாக தொகையை செலுத்தியவுடன் இணைப்பை துண்டித்துவிடுவார்கள். இதுபோன்ற குறைந்த விலைகளில் பொருட்கள் கிடைக்கிறது என பொதுமக்கள் யாரும் பணத்தை மோசடி ந பர்களிடம் செலுத்தி ஏமாற வேண்டாம். இணைய வழி மோசடிக்காரர்கள், தங்களை ராணுவ வீரர்கள் அல்லது மத்திய படை பிரிவில் பணிபுரிவதாகவே சொல்கின்றனர்.

மேலும் மோட்டார் சைக்கிள், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பெரிய தொலைக்காட்சி போன்றவற்றின் படத்தை போட்டு அதிக விலை உள்ள பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கிறோம் என்கின்றனர். பேராசை பட்டு மக்கள் பணத்தை இழக்கின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் இதுபோன்று 14 புகார்கள் பதிவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News