புதுச்சேரி

கோப்பு படம்.

ராகுல்காந்தி தண்டனை நிறுத்திவைப்பு முன்னாள் அமைச்சர் கண்ணன் வரவேற்பு

Published On 2023-08-05 10:56 IST   |   Update On 2023-08-05 10:56:00 IST
  • உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மற்றும் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் அமைச்சர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மற்றும் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இது ஐனநாயத்துக்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். இன்றைய நாட்டின் சூழ்நிலையில், நீதிமன்றங்கள், குறிப்பாக உச்ச நீதிமன்றம், நமது மக்களின் உரிமைகளைக் காக்கும் அமைப்பாக விளங்குவது நமக்கு நிம்மதி அளிக்கிறது.

இதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News