புதுச்சேரி
பக்தர்களுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. அன்னதானம் வழங்கிய காட்சி.
- 200-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் அறு சுவை விருந்து வழங்கப்பட்டது.
- பாரதி மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசனின் தாயார் பத்மாவதி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ஆடி அமாவாசையையொட்டி கீழ் புத்துப்பட்டில் அமைந்துள்ள பராசக்தி அம்மன் கோவிலில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் அறு சுவை விருந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. அவரது துணைவியார் சுபலட்சுமி வெங்கடேசன், தொழிலதிபர் வரதராஜ பெருமாள் குடும்பத்தினர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பிரியா, பாரதி மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.