புதுச்சேரி

 திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்றம்

Published On 2023-06-21 12:26 IST   |   Update On 2023-06-21 12:26:00 IST
  • அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.
  • பொருளாளர் அமுர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகின்ற ஜூலை மாதம் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு  10 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நேற்று பிற்பகல் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. வருகின்ற ஜூலை 3-ம் தேதி கரகத் திருவிழாவும், 4-ம் தேதி பக்காசூரனுக்கு சோறு போடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூலை 5-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் திரவுபதி-அர்ச்சுனன் சாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

6-ம் தேதி அர்சுனன் தபசு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் ஜூலை

7-ம் தேதி மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா, துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமுர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News