புதுச்சேரி

படகில் பாதுகாப்பு இல்லாமல் பயணிகள் பாதுகாப்பு இல்லாமல் பயணிப்பதை படத்தில் காணலாம்.

காரைக்கால் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு இல்லாமல் படகு சவாரி அழைத்து செல்லும் மீனவர்கள்

Published On 2023-08-06 07:11 GMT   |   Update On 2023-08-06 07:11 GMT
  • புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் இயங்கும் படகு துறையில் கட்டணம் செலுத்தி சவாரி செய்வது வழக்கம்.
  • படகுகளில் 5 பேர் அளவில் ஏற்ற வேண்டிய இடத்தில் 15-க்கு மேற்பட்டவர்களை ஏற்றி செல்கின்றனர்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்ட கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் வருகிறது. அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை முகத்துவாரத்தில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் இயங்கும் படகு துறையில் கட்டணம் செலுத்தி சவாரி செய்வது வழக்கம். இவர்கள் முறையான படகு சவாரியை செய்வதில்லை என்ற குற்றச் சாட்டு கடந்த சில வருடங்களாக உள்ளது.

இந்நிலையில் காரைக்கால் கடற்கரை பகுதிக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை, அங்குள்ள மீனவர்கள் தங்கள் பைபர் படகில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்கள் படகுகளில் 5 பேர் அளவில் ஏற்ற வேண்டிய இடத்தில் 15-க்கு மேற்பட்டவர்களை ஏற்றி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Tags:    

Similar News