மதகடிப்பட்டுபாளையத்தில் நடைபெற்ற பண்ணைப்பள்ளி வார விழாவில் சிறப்பாக காய்கறிகளை பயிர் செய்த விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர் நடராஜன் பரிசு வழங்கினார்.
விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி நிறைவு விழா
- உதவி வேளாண் அலுவலர் பக்கிரி அனைவரையும் வரவேற்று பேசினார்.
- காய்கறி சாகுபடி பற்றிய 90 பக்க விளக்க கையேடு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு பாளையத்தில் விவசாயிகளுக்கு அனுபவ விவசாயிகளே பயிற்சியளிக்கும் பண்ணைப்பள்ளி பயிற்சி நிறைவு விழா விவசாய பண்ணை வளாகத்தில் நடைபெற்றது.
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணை த்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மதகடிப்பட்டு பாளையம் கிராமத்தில் பண்ணைப்பள்ளியின் நிறைவு வகுப்பு மற்றும் விவசாயிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் வேளாண் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் பக்கிரி அனைவரையும் வரவேற்று பேசினார்.
பண்ணை பள்ளி நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரியின் முதல்வர் முகமதுயாசின் கலந்துகொண்டு காய்கறி பயிர்களில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நு ட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ள உத்திகள் குறித்து விளக்கி பேசி
னார். மதகடிப்பட்டு பாளையத்தின் முன்மாதிரி விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை சக விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கெடுத்த விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களில் பயன்படுத்த உபகரணம் பரிசாக வழங்கப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தோட்டக்கலை முன்மாதிரி விவசாயிகள் அனைவருக்கும் காய்கறி சாகுபடி பற்றிய 90 பக்க விளக்க கையேடு வழங்கப்பட்டது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஸ்வரி, செயல்விளக்க உதவி யாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் சண்முகம், விஜயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.