புதுச்சேரி

முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தோல்பாவை பொம்மைகளின் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட காட்சி.

null

தோல்பாவை சித்திரங்கள் கண்காட்சி

Published On 2023-08-20 11:19 IST   |   Update On 2023-08-20 13:20:00 IST
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம்

புதுச்சேரி:

வாதானூர் கிராமத்தைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற ராஜப்பா கலைக்குழுவின் பொம்மலாட்ட கலைஞர் குப்புசாமியின் குடும்பத்தினர் தலைமுறை தலை முறையாக பாரம்பரிய பொம்மலாட்ட கலை நிகழ்த்தி நடத்தி வருகின்றனர்.

மகாபாரதம், ராமாயணம், புராண, சமய கதைகள் பொம்மலாட்ட கதை களங்களாகும். இசை, நடனம் மூலம் தோல் பாவை பொம்மைகள் வழியாக கதைகள் பார்வையாள ர்களுக்கு சொல்லப்படும். இதற்காக பயன்படுத்தப்படும் அனைத்து தோல்பாவைகளும் வெவ்வேறு கால கட்டத்தை கொண்டது. இந்திரா காந்தி தேசிய கலை மையம் ஆதரவுடன் பொம்மலாட்ட தோல்பாவை கள் கண்காட்சி புதுவை முருங்கம்பாக்கம் கைவினை கிராமத்தில் ஒரு மாதம் நடக்கிறது. தோல் பாவை பொம்மைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆட்டின் தோலால் செய்யப்பட்டு இயற்கை வண்ணங்களால் வர்ணம் பூசப்பட்டது.

3 தலைமுறைகளாக உருவாக்கப்பட்ட தோல்பாவைகள்  பொலிவு குறையாமல் காட்சிக்கு வைக்கப்பட்டு ள்ளது.

ராமாயணம், மகாபாரதம் காட்சியில் வரும் உருவங்கள், கிராம தேவதைகள், விலங்குகள், பறவைகள் போன்ற பல்வேறுபட்ட தோல்பாவைகள் மிக அழகான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியை வெளிநாட்டவர்கள், பள்ளி மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆர்வமாக வந்து பார்த்து செல்கின்றனர். இந்திய நாட்டின் அறிய படைப்புகளை வருங்கால தலைமுறைகள் கண்டு மண்ணின் பெருமையை உணர்ந்து பயன் பெறவேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் குறிக்கோளாகும் என முருங்கம்பாக்கம் இந்திரா காந்தி தேசிய கலை மைய மண்டல இயக்குனர் கோபால் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News