புதுச்சேரி

அரசு பள்ளி மாணவர்களுக்கு கராத்தே சுந்தர்ராஜன் எழுதி உபகரணங்கள் வழங்கிய காட்சி.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எழுத உபகரணங்கள்

Published On 2023-04-04 11:56 IST   |   Update On 2023-04-04 11:56:00 IST
  • புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் சார்பில் தேர்வு எழுதுவதற்கான உபகரணங்கள் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வழங்கினார்.
  • நிகழ்ச்சி பள் ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி பொறுப்பாசிரியை மாலா, ஆசிரியர்கள் கீதா, சோமசுந்தரம், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை தர்மாபுரி அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் சார்பில் தேர்வு எழுதுவதற்கான உபகரணங்கள் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வழங்கினார்.

மேலும் மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதுவதற்கு விழிப்புணர்வு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியை பிரேமலதா, சாந்தி மற்றும் பள்ளி பொறுப்பாசிரியை மாலா, ஆசிரியர்கள் கீதா, சோமசுந்தரம், செந்தில்குமார் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

Tags:    

Similar News