- தாவீதுபேட்டில் நகராட்சி துப்புரவு பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை உப்பளம் தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது50).
- அப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு பாத்திமாமேரி சென்று விட்டார். அந்த நேரத்தில் ஆறுமுகத்துக்கு நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
புதுச்சேரி:
தாவீதுபேட்டில் நகராட்சி துப்புரவு பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை உப்பளம் தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது50). இவர் புதுவை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாத்திமா மேரி என்ற மனைவியும், மணிவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
மணிவண்ணனுக்கு திருமணமாகி அவர் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதற்கிடையே ஆறுமுகம் நீரழிவு நோய் மற்றும் தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகம் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார். அப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு பாத்திமாமேரி சென்று விட்டார். அந்த நேரத்தில் ஆறுமுகத்துக்கு நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் மின் விசிறியில் நைலான் கயிற்றால் அவர் தூக்கு போட்டு தொங்கினார். நிகழ்ச்சி முடிந்து பாத்திமா மேரி வீடு திரும்பிய போது அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி பாத்திமாமேரி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.