புதுச்சேரி

கோப்பு படம்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி ஈஸ்டர் வாழ்த்து

Published On 2023-04-08 10:45 IST   |   Update On 2023-04-08 10:45:00 IST
  • சகோதர- சகோதரிகள் அனைவருக்கம் எனது இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
  • இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும், கருணையையும் நினைவுபடுத்திக்கொள்ள இந்த ஈஸ்டர் ஒரு நல்ல வாய்ப்பு.

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

மனித குலத்தை வாழ்விக்க தன்னுயிரை தந்த அன்பின் திருவுருமான இயேசு பிரான் புத்துயிர் பெற்ற நாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி மகிழும், கிறித்துவ சகோதர- சகோதரிகள் அனைவருக்கம் எனது இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நாம் நமது வாழ்வை மகிழ்ச்சியை புதுப்பித்துக் கொள்வதற்கான நம்பிக்கை யை தருவதே ஈஸ்டர் பண்டிகையின் உள்ளார்ந்த அர்த்தமாக உள்ளது. ஆண்டவனின் கிருபை இதில் அடங்கியுள்ளது. இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும், கருணையையும் நினைவுபடுத்திக்கொள்ள இந்த ஈஸ்டர் ஒரு நல்ல வாய்ப்பு.

புத்துயிர் பெற்ற இறைவனின் அருட்கொ டையானது, உங்கள் வீடுகளை பேரொளியாலும், உங்கள் ஆன்மாக்களை கருணை யாலும், எண்ண ங்களை மேன்மையான சிந்தனை களாலும் நிரப்பட்டும். கருணாமூர்த்தியின் அளவற்ற ஆசீர்வாதம் உங்களோடும், உங்கள் குடும்பத்தாரோடும் என்றும் நிலைத்திருக்க பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News