புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

குடிநீர் தொட்டி சுத்தகரிப்பு பணி

Published On 2023-07-20 11:22 IST   |   Update On 2023-07-20 11:22:00 IST
  • கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
  • கிருமி நாசினி தெளித்து அதன் தொடர்ச்சியாக பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை செயலிழக்க செய்யப்பட்டது.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்குட்பட்ட உடையார் தோட்டம் பகுதியில் அப்துல் கலாம் அரசு குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தகரிப்பு செய்வதற்கான பணிகள் கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பார்த்த சாரதி முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து சுவற்றில் உள்பகுதியில் உள்ள படிந்த பாசிகள் கருவிகள் மூலம் அகற்றப்பட்டது. மேலும் கிருமிகளை அழிக்கும் சிறந்த அம்சங்கள் கொண்ட கிருமி நாசினி தெளித்து அதன் தொடர்ச்சியாக பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை செயலிழக்க செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, மீனவரணி விநாயகம், கிளை செயலாளர்கள் சக்திவேல், செல்வம், ராகேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News