புதுச்சேரி

வாய்க்கால் அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

வாய்க்கால் அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-04-14 09:17 IST   |   Update On 2023-04-14 09:17:00 IST
  • ரூ. 44½ லட்சம் மதிப்பீட்டில் எல் மற்றும் யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
  • மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாஜலபதி, ஜி.என்.பாளையம் கோவில் அறங்காவல் குழு தலைவர் நாவப்பன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் ஜி.என்.பாளையம் அய்யனார் கோவில் தொடங்கி அரசூர் பாதை வரை செல்லும் சாலையின் இருபுறமும் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 44½ லட்சம் மதிப்பீட்டில் எல் மற்றும் யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதற்கான பூமி பூஜை நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற் பொறியாளர் சவுந்தர்ராஜன், உதவிப் பொறியாளர் சீனுவாசன் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமு, செல்வநாதன், தர்மராஜ், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாஜலபதி, ஜி.என்.பாளையம் கோவில் அறங்காவல் குழு தலைவர் நாவப்பன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News