புதுச்சேரி

கோப்பு படம்.

ஆட்சியில் இருக்க பொதுமக்கள் பணத்தை வாரி இறைக்க வேண்டாம்

Published On 2023-07-22 06:13 GMT   |   Update On 2023-07-22 06:13 GMT
  • முன்னாள் எம்.பி. ராமதாஸ் தாக்கு
  • தேர்தலில் வாக்கு பெற கடன் வாங்கிய பணத்தை வறுமை ஒழிப்பு என்ற பெயரில் அரசு வீணடிக்கிறது. உண்மையான ஏழைகளுக்கு மட்டும் உதவிகள் செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 17-ந் தேதி இந்திய அரசின் நிதி ஆயோக் இந்திய வறுமை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

புதுவையில் கிராமப்புற வறுமை 78.7 சதவீதம் ஆகவும், நகர்ப்புற வறுமை 7.14 சதவீதமாகவும் குறைந்துள்ளது. வறுமையை 2030-க்கு முன்பாக பாதியாக குறைக்க வேண்டும் என்ற இலக்கை புதுவை அடைந்து விட்டது. வறுமையை புதுவை வென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக புதுவை அரசு அதிக வறுமை இருப்பதாக அனுமானம் செய்து கொண்டு தனது திட்டங்களில் அரசின் நிதியை வீணாக்குகிறது.

புதுவையில் 54 சதவீத குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சிகப்பு ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள் எல்லாம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வர்களாக தீர்மானிக்கப் பட்டுள்ளனர்.

புதுவையில் 3 லட்சத்து 58 ஆயிரத்த 644 குடும்பங்கள் உள்ளன. அதில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 825 குடும்பங்கள் அரசு நேரடி பணம் அளிக்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர்

யூனியன் பிரதேசத்தில் பாதி மக்கள் தொகை வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக தெரிகிறது. இந்த முரண்பாடுக்கு காரணம் இதுவரை முறைப்படி தொழில்நுட்ப ரீதியாக ஒரு ஆய்வை நடத்தி புதுவையின் வறுமை நிலையை அரசு கண்டறியவில்லை.

தேர்தலில் வாக்கு பெற கடன் வாங்கிய பணத்தை வறுமை ஒழிப்பு என்ற பெயரில் அரசு வீணடிக்கிறது. உண்மையான ஏழைகளுக்கு மட்டும் உதவிகள் செய்ய வேண்டும்.

வசதி படைத்தவர்களுக்கு அரசு பணத்தை வீணாக்குவது சரியல்ல. இந்த முரண்பாடை துணிச்சலாக களைய வேண்டும்.

இதைத் தவிர்த்து தன் சொந்த நலனுக்காக ஆட்சியில் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காக பொது மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து புதுவை அரசையும், அரசியலையும் பாழ்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News