புதுச்சேரி

கோப்பு படம்.

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-08-18 15:14 IST   |   Update On 2023-08-18 15:14:00 IST
  • இளைஞர்கள் திரளாக பங்கேற்க சம்பத் எம்.எல்.ஏ. அழைப்பு
  • மன அழுத்தமே மாணவர்களை யும் பெற்றோர்களையும் தற்கொலைக்கு தூண்டுகின்றது.

புதுச்சேரி:

புதுவை தி.மு.க. இளைஞரணி மாநில அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிலும் மற்றும் புதுச்சேரியிலும் மாணவர்களின் மருத்துவ கனவை சீர்குலைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

அதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. நீட் தேர்வு வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டுள்ள பா.ஜனதா என்றுமே சமூக நீதியை கடைபிடிப்பதில்லை. நீட் தேர்வின் முதல் 50 மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் இதுவரை

எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவு மாணவர்கள் யாரும் இடம் பெற்றதில்லை.

நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்தும் பல லட்சங்கள் பள்ளியிலும் தனியாக பயிற்சிக்கும், செல விட்டு ஒரு சில மாணவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகள் கூட இதற்காக தயாராகியும் தங்களது காலத்தையும் பணத்தையும் இழக்கின்றனர்.

இதனால் ஏற்படும் மன அழுத்தமே மாணவர்களை யும் பெற்றோர்களையும் தற்கொலைக்கு தூண்டு கின்றது. இதுவரை 16 மாண வர்களையும் ஒரு பெற்றோ ரையும் நீட் என்னும் கொழுந்து தீ விழுங்கி உள்ளது.

இதே நிலை தொடரு மானால் இன்னும் பல உயிர்கள் இந்த சமூகம் இழக்க நேரிடும். உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தி.மு.க. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி அறவழிப் போராட்டத்தை அறிவித்துள்ளது. நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) சுதேசி மில் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தொகுதியில் உள்ள தி.முக இளைஞரணி நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News