யோகாசன போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.
- மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி கிழக்குகடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- சங்கத்தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கமும் யங் இந்தியன் இணைந்து யோகாசனா பாரத் தலைமையில் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி கிழக்குகடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத்தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சங்க பொதுச்செயலாளர் தயாநிதி யோகாசன செயல்முறை குறித்து விளக்கினார்.
முதன்மை விருந்தினராக நேரு எம்.எல்.ஏ. , ஒலிம்பிக் விளையாட்டு சங்க பொதுச்செயலாளர் தனசேகர், எங் இந்தியன் அமைப்பு தலைவர் திலீப் அனிருத், துணைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவ- மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக சங்க துணைத் தலைவர் தேவசேனா பவனானி, சங்கப் பொருளாளர் சண்முகம், சங்க உறுப்பினர்கள் செந்தில் குமார், அன்பழகன் மற்றும் லலிதா சண்முகம் ஆகியோர் மாணவ-மாணவிகளை வாழ்த்தினர்.
யோகா நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.முடிவில் சங்க துணை செயலாளர் டாக்டர் பாலாஜி நன்றி கூறினார்.