புதுச்சேரி

கோப்பு படம்.

நிலுவை தொகை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு

Published On 2023-06-07 09:39 IST   |   Update On 2023-06-07 09:39:00 IST
  • மின்கட்டணம் மற்றும் நிலுவை தொகையை உரிய நேரத்தில் செலுத்திய மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்
  • தவறும்பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை மின்துறை கிராமப்புற கோட்டம் (தெற்கு) செயற்பொறியாளர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்துறை கிராமப்புற கோட்டம் (தெற்கு) அலுவலகத்திற்குட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானூர், கரியமாணிக்கம், கரையாம்புத்தூர் ஆகிய பிரிவு அலுவலக பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களின் மின்கட்டணம் மற்றும் நிலுவை தொகையை உரிய நேரத்தில் செலுத்திய மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள். தவறும்பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News