பரிக்கல்பட்டு அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.
பரிக்கல்பட்டு அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
- அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்பு உரை ஆற்றினார்
- விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
புதுச்சேரி:
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சார்பில் பரிக்கல்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி ஆனந்தவேலு கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார், கீழ்பரிக்கல்பட்டு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் மலர்மன்னன், தமிழ்மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினார் கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்பு உரை ஆற்றினார்
பேரணியின் போது மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.