நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
கட்டுமான பணிகளை படிப்படியாக செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
- செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், பெரியமார்க்கெட் வியாபாரிகள் பலர் ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்றனர்.
- தனியார் அடிக்காசு வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி நகரக்குழு சார்பில் நேருவீதி- காந்தி வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் நகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். சீனியர் தலைவர் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், பெரியமார்க்கெட் வியாபாரிகள் பலர் ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்றனர்.
4 ஆயிரம் குடும்பங்க ளுக்கு வாழ்வாதாரமாக உள்ள பெரிய மார்க்கெட்டை சீர்குலைக்கக் கூடாது. கட்டுமான பணிகளை படிப்படியாக செய்ய வேண்டும். மார்க்கெட்டில் குடிநீர், கழிப்பிட வசதி செய்ய வேண்டும். நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.
முத்தியால்பேட்டை மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சன்டே மார்க்கெட் வியாபாரிகளிடம் தனியார் அடிக்காசு வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.