கோப்பு படம்.
கட்அவுட்- பேனர் வைப்போர் மீது புதுவையிலும் வழக்கு
- மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
- புதுவையிலும் பேனர் தடை சட்டம் நடைமுறையில் இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி பேனர் மற்றும் விளம்பரப் பலகைகள் வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை வரவேற்கிறோம். புதுவையிலும் பேனர் தடை சட்டம் நடைமுறையில் இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை.
தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை பின்பற்றி, புதுவையில் உள்ள அனைத்து பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பேனர் மற்றும் கட் அவுட்டுகளையும் போர்க்கால அடிப்படையில் தொடர்ச்சியாக அகற்றிட வேண்டும். அனுமதி இன்றி பேனர் வைத்த அனைவர் மீதும் பாகுபாடு இன்றி வழக்கு மற்றும் அபராதம் விதிக்க வேண்டும்.
புதுவை அரசு, மாவட்ட நிர்வாகம் 15 நாட்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து சட்டவிரோத விளம்பர கட் அவுட் பேனர்களையும் அகற்றாவிட்டால், மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.