புதுச்சேரி

வெற்றி பெற்ற அணிக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ. பரிசு கோப்பை வழங்கிய காட்சி.

மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி-பாஸ்கர் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்

Published On 2023-04-09 10:01 IST   |   Update On 2023-04-09 10:01:00 IST
  • மாணவர்களின் கிரிக்கெட் போட்டிகள் வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
  • ஆட்டநாயகன் விருது அபைஸ் கிரிக்கெட் அணியின் ரித்திக்குமரன் பெற்றார்.

புதுச்சேரி:

புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கிரிக்கெட் போட்டிகள் வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டி பரிசளிப்பு விழாவிற்கு அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் என்ற தட்சிணா மூர்த்தி. பாகூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை வெரோனஸ் விஜயலட்சுமி வீராம்பட்டினத்தில் எம்.ஆர்.பி. கெஸ்ட் ஹவுஸின் உரிமையாளர் ராஜாராம் ஓய்வு பெற்ற ஆய்வாளர் மனோகர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

முதல் இடத்தை பிடித்த வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் அகாடமி அணிக்கு தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி முதல் பரிசு கோப்பையை வழங்கி வீரர்களுக்கு பதக்கத்தையும் அணிவித்தார்.

ஆட்டநாயகன் விருது அபைஸ் கிரிக்கெட் அணியின் ரித்திக்குமரன் பெற்றார். மேலும் அந்த அணியின் ரோகன் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார். ஜோதி மெமோரியல் கிரிக்கெட் அகாடமி அணியின் யுக்காஷ் சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியை திறம்பட நடத்திய புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேசன் சங்க நிர்வாகிகளையும் பாஸ்கர் எம்.எல்.ஏ வாழ்த்தி பாராட்டினார். கிரிக்கெட் போட்டி ஏற்பாடுகளை புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் நடத்தி முடித்தனர்.

Tags:    

Similar News