புதுச்சேரி

சமையல் எரிவாயு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

மாணவர்களுக்கு சமையல் எரிவாயு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

Published On 2023-06-23 10:35 IST   |   Update On 2023-06-23 10:35:00 IST
  • இந்திரா இண்டேன் சர்வீஸ் பரசுராமன் தலைமையில் நடைபெற்றது.
  • மாணவிகளுக்கு செயல் விளக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் செய்து காட்டினார்

புதுச்சேரி:

இந்திரா இன்டேன் கியாஸ் நிறுவனம் சார்பில், இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி மாணவர்க ளுக்கான சமையல் குறித்தும், திரவ எரிவாயு பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு செயல் விளக்க முகாம் நடைபெற்றது.

இந்திரா இண்டேன் சர்வீஸ் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு செயல் விளக்கத்தில் புதுவை எல்.பி.ஜி. கியாஸ் சேல்ஸ் உதவி மேலாளர் சம்பத் குமார் ரெட்டி மாணவ-மாணவிகளுக்கு செயல் விளக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் செய்து காட்டினார் எல்.பி.ஜி ஆப்ரேஷன் அதிகாரி ராஜேஷ் மற்றும் டாக்டர் சந்தோஷ் , ,நுகர்வோர் அமைப்பாளர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News