புதுச்சேரி
கோப்பு படம்.
null
கரசூர் தொழில்பேட்டையை மேம்படுத்த ஆலோசனை கூட்டம்
- அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது
- 4 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் 2 நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை அமைச்சர் நமச்சிவாயத்திடம் விளக்கினர்.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டு கரசூரில் 100 ஏக்கரில் மருத்துவபூங்கா மற்றும் தொழில்பேட்டை ஏற்படுத்தப்பட உள்ளது.
முதலீட்டு ஊக்குவிட்டு, வசதி, மத்திய நிதி உதவி திட்டங்களை செயல்படுத்து வது குறித்து ஆலோசனைக்கூட்டம் பிப்டிக் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
தொழில்நுட்ப ஆலோசகர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
தொழிற்சாலைகள் கொண்டு வர வழி காட்டுதல் நெறிமுறைகள் ஏற்படுத்த கன்சல்டன்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. 4 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் 2 நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை அமைச்சர் நமச்சிவாயத்திடம் விளக்கினர்.
கூட்டத்தில் தொழில் துறை செயலர் ஜவகர், இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் பங்கேற்றனர்.