புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த காட்சி.

புதிய மின் கம்பம் அமைக்கும் பணி-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-02-06 06:47 GMT   |   Update On 2023-02-06 06:47 GMT
  • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து வந்தன.
  • இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து வந்தன.

இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் சில சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும் குற்ற செயல்களுக்கும் பயன்படுத்தி வந்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் மின் துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் புதிய மின் கம்பங்கள் அமைத்தல், புதிய மின் விளக்குகள் பொறுத்தி பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.

இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வல்லவன், துணை பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News