புதுச்சேரி

கோப்பு படம்.

குரூப் "பி" பணியிடங்களில் எம்.பி.சி.க்கு இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்வு நடத்த சதி

Published On 2023-07-12 13:28 IST   |   Update On 2023-07-12 13:28:00 IST
  • புதுவை அரசுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கண்டனம்
  • தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 8 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தில் வன்மு றை கலாச்சாரத்தை ஒழிக்க, புதுவை அரசு காலியாக இருக்கின்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு களை ஏற்படுத்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதன் விளைவாக அரசு அறிக்கை வெளியிட்டது.

குறிப்பாக புதுவை அரசில் இருக்கின்ற குருப்"பி" பணியிடங்களில் எம்.பி.சி. எனப்ப டும் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு போலீஸ்துறை உதவியாளர் பணியிடங்கள், போக்குவரத்து துறை ஆய்வாளர் பணியிடங்கள், வேளாண்துறையில் பொறியாளர், வேளாண் அதிகாரி மற்றும் பல்வேறுநிலை அதிகாரிகள், புள்ளியியல் துறையில் திட்டமிடல் அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதன் விளைவாக எதிர்க்கட்சிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியதன் பலனாக என்.ஆர். காங்கிரஸ் அரசு குருப்"பி" பணியிடங்களில் மிகவும் பின்தங்கிய வகுப்பி னருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தது.

ஆனால் தற்போது வேளாண்துறை அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான தேர்வில் எம்.பி.சி. இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்வு நடத்த கோப்புகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும்

தலைமை அதிகாரிகள் பா.ஜனதாவின் சித்தா ந்தங்களை செயல்படுத்தும் நோக்கிலே இருக்கிறார்கள் என்பதை முதல்-அமைச்சர் உணர வேண்டும். அதுமட்டு மல்லாமல் சமூக நலத்துறை அமைச்சகம் தேர்வுகள் நடத்த இருக்கின்ற அனைத்து துறைகளுக்கும் குருப் "பி"பணியிடங்களில் எம்.பி.சி. அரசாணை வெளி யிட்டதை அத்துறைகளுக்கு அனுப்பி அதன் அடிப்படை யில் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். இம்மாதிரியான குளறுபடிகள் நடக்கின்றனவோ என்று ஐயம் கொள்ளத் தோன்றுகிறது. முதல்-அமைச்சர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்கள் புதுவை அரசில் தேர்வுகள் நடத்தபட இருக்கின்ற குருப்"பி" பணியிடங்களில் எம்.பி.சி. அடிப்படையில் தேர்வு நடத்திட உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News