சாரம் அவ்வை திடலில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம் நடந்த போது எடுத்த படம்.
காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்
- ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சத்தியாகிரகம், மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- அவ்வை திடலில் நடந்த போராட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சத்தியாகிரகம், மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
புதுவை காங்கிரசாரும் தொகுதிதோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காமராஜர் நகர் தொகுதி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. அவ்வை திடலில் நடந்த போராட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார்.
மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள்
எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், நீலகங்கா தரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், வக்கீல் மருதுபாண்டியன், சிறப்பு அழைப்பாளர் வினோத், ராஜா, ஆர்.இ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியாகிரக போ ராட்டத்தில் எதிர்கட்சி த்தலைவர் சிவா, இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், மார்க்சிஸ்டு மூத்த தலைவர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது.