புதுச்சேரி

காமராஜர் சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய காட்சி.

காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2023-04-04 13:44 IST   |   Update On 2023-04-04 13:44:00 IST
  • ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த தீர்ப்புக்கு தடை விதித்து சூரத் செசன்ஸ்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
  • வட்டார தலைவர்கள் ஆறுமுகம், ரமேஷ், மகிளா காங்கிரஸ் பஞ்சகாந்தி, ரத்னா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த தீர்ப்புக்கு தடை விதித்து சூரத் செசன்ஸ்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை வரவேற்று காமராஜர் சிலை அருகே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி காங்கிரசார் கொண்டாடினர்.

மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, பொதுச்செயலாளர்கள் தனுசு, இளையராஜா, திருமுருகன், சந்திரிகா, வட்டார தலைவர்கள் ஆறுமுகம், ரமேஷ், மகிளா காங்கிரஸ் பஞ்சகாந்தி, ரத்னா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News