காந்தி வீதி-ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து புதுவை மகளிர் காங்கிரசார் தொடர் போராட்டம்
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
- மகளிர் காங்கிரசார் போராட்டத்தினை கைவிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில மகளிர் காங்கிரசின் சார்பில் லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்ச காந்தி தலைமை தாங்கினார்.
துணை தலைவிகள் ஜெயலட்சுமி, விஜி, நிஷா, பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதுபோல் நேற்று மாலை கொக்கு பார்க் அருகே மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து மகளிர் காங்கிரசார் போராட்ட த்தினை கைவிட்டனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை நகர கமிட்டி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்திவீதி, ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், கிளை செயலாளர்கள் ஸ்டாலின், ஆனந்த், ராமு, பாரி, கமிட்டி உறுப்பினர்கள் வீரா, ரஞ்சித், மணவாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.