புதுச்சேரி

கோப்பு படம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக அமைப்பினர் கைது

Published On 2023-08-07 14:00 IST   |   Update On 2023-08-07 14:00:00 IST
  • முருங்கப்பாக்கம் பகுதியில் கறுப்புக்கொடி காட்டப்படும் என புதுவை மாநில பெரியார் சிந்தனையா ளர்கள் இயக்கம் அறிவித்தது.
  • சிறப்பு அதிரடிபடை போலீசார் முன் எச்சரிக்கையாக கைது செய்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி:

மணிப்பூர் கலவரம் தொடர்பாக நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்காமல், புதுவைக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முருங்கப்பாக்கம் பகுதியில் கறுப்புக்கொடி காட்டப்படும் என புதுவை மாநில பெரியார் சிந்தனையா ளர்கள் இயக்கம் அறிவித்தது.

இதையடுத்து நடவடிக்கையாக பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தீனா, ஒருங்கிணைப்பாளர் சந்திரன், செயலாளர் பரத், துணை அமைப்பாளர் கர்ணா ஆகிய 4 பேரை சிறப்பு அதிரடிபடை போலீசார் முன் எச்சரிக்கையாக கைது செய்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக, இந்திய தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் கலைபிரியன், சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் ஜெபின், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகிய 3 பேரை அவர்களின் வீடுகளில் நேற்று அதிகாலை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News