கம்யூனிஸ்டுகள்- விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
கம்யூனிஸ்டுகள்- விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஜென்மராக்கினி மாதா கோவில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு வழங்கிய நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது.
சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளான புதுவை பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்யக்கோரி அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆம்பூர் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ நாராகலைநாதன், நிர்வாகிகள் சேதுசெல்வம், அபிஷேகம், கீதநாதன், மார்க்சிஸ்ட்டு பிராந்திய செயலாளர் ராஜாங்கம், முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலர் தேவபொழிலன் ஆகியோர் பங்கேற்றனர்.
பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முன்னதாக ஜென்மராக்கினி மாதா கோவில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.