கடலில் படகில் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார்.
- சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்க இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
- கடலோர மீன் பிடி துறைமுகம் ஆகியவைகளை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடலோர மாவட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலோரப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அரசு கட்டிடங்களை பாதுகாக்கும் வகையிலும்
2வது நாளாக லைட் ஹவுஸ், தலைமை செயலகம், கடலோர மீன் பிடி துறைமுகம் ஆகியவைகளை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்தனர்.
தேங்காய்திட்டு துறைமுக பகுதியில் இருந்து கடலோர பாதுகாப்பு படை சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் கடலோர காவல் படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் படகுகள் மற்றும் மீனவர்களின் அடையாளங்கள் குறித்தும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என சோதனை செய்தனர்.
மீனவ கிராமங்களான வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், பூரணாங்குப்பம், நல்லவாடு உள்ளிட்ட கரையோர மீனவ கிராமங்களில் சோதனை செய்தனர். மக்கள் கூடும் இடங்களான புதிய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றிலும் இந்த ஒத்திகையை முன்னிட்டு போலீசார்பணியில் ஈடுபட்டனர்.