புதுச்சேரி

தந்திராயன்குப்பம் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் துணை போலிஸ் சூப்பிரண்டு சுனில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

படகு நிறுத்துவதில் 2 கிராம மீனவர்களிடையே மோதல்

Published On 2023-07-01 13:48 IST   |   Update On 2023-07-01 13:48:00 IST
  • கோட்டக்குப்பம் அருகே பதட்டம்
  • மீனவர்களுக்கு வியாபார ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திராயங்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் படகை நிறுத்தி மீன்பிடி தொழிலை செய்து வந்தனர்.

இந்நிலையில் பக்கத்து மீனவ கிராமமான சின்னமுதலியார்சாவடி மீனவ மக்கள் தங்களுடைய கிராமத்தில் மண்ணரிப்பு ஏற்படுவதால் படகை தந்திராயன்குப்பம் கிராமத்தில் நிறுத்தி வந்தனர்.

இதற்கிடையே சின்ன முதலியார் சாவடி மீனவர்கள் படகை தந்திராயன்குப்பம் பகுதியில் நிறுத்துவதால் அப்பகுதி மீனவர்களுக்கு வியாபார ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே தற்போது சின்ன முதலியார் சாவடி மீனவர் கிராமத்தில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கும் நிலையில் அவர்களது படகை அவர்களது கிராமத்திற்கு கொண்டு செல்லும்படி தந்திராயன்குப்பம் மீனவ மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனால் இரு கிராம மீனவ மக்களிடையே சிறு சிறு மோதல் இருந்து வந்தது.

இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என தந்திராயன்குப்பம் மீனவர்கள் பஞ்சாயத்து சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மீன்வ ளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

ஆனால் இப் பிரச்சனைக்கு முடிவு தெரியாததால் கடந்த 4 நாட்களாக தந்திராயன் குப்பம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது எதிர்ப்பை காட்டி வந்தனர்.

திடீரென இன்று காலை தீக்குளிக்கும் போராட்டமும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப் போவதாக தந்திராய ன்குப்பம் மீனவர்கள் அறிவித்திருந்தனர். அங்கு கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு தீயணைப்பு வாகனம் வரவழைக்க ப்பட்டது.

இதனால் கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரைசாலை சாலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கோசங்கள் போட்டபடி சாலை மறியலில் ஈடுபட முயன்றவ ர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவா ர்த்தைக்கு அழைத்தனர்.

அதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிர மணியன் பேச்சுவா ர்த்தை யில் கலந்து கொண்டார். அப்போது நடந்த பேச்சு வார்த்தையில் தந்திராயன் குப்பம் மீனவ பகுதியில் நிறுத்தி வைக்கப்ப ட்டிருக்கும் சின்ன முதலியார் சாவடி கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடி படகுகளை ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் எடுக்கச் சொல்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் தந்திராயங்கு ப்பம் மீனவ பஞ்சாயத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அனைத்து படகுகளையும் போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

ஒருவழியாக அதிகாரிகளின் வாக்குறு தியை ஏற்றுக்கொண்ட தந்திராயன்குப்பம் மீனவர்கள் கலைந்து சென்றனர். இந்த பிரச்சினையால் தந்திராயன்குப்பம் மற்றும் சின்னமுதலியார் சாவடி மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் அங்கு போலீ சார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News