புதுவையில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
புதுவையில் சந்திராயன் ஆரோக்கிய திட்டம்
- மத்திய அரசு ஆயுஷ்மான் பவா என்ற திட்டம் தொடங்கி உள்ளது.
- இத்த திட்டத்தின் தொடக்க விழா குஜராத் ராஜ்பவனில் இன்று நடந்தது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் மக்களுக்கு சுகாதாரத் துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் சென்றடையும் விதமாக மத்திய அரசு ஆயுஷ்மான் பவா என்ற திட்டம் தொடங்கி உள்ளது.
இத்த திட்டத்தின் தொடக்க விழா குஜராத் ராஜ்பவனில் இன்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி காணொளி மூலம் இன்று கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பப்பட்டது.
தொடர்ந்து புதுவை அரசின் சார்பில் சந்தி ராயன் என்ற ஆரோக் கியத்தை நோக்கி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவுக்கு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச் சர் ரங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சுகாதாரதுறை செய்லாளர் முத்தம்மா வரவேற்றார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய் ஜெ. சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, ஜான்குமார், சிவசங்கர், பாஸ்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, சுகா தாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் முரளி, ரகுநாதன், திட்ட அதிகாரி துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்துணவு வழங்கியவர்கள், அதிக ரத்தானம் வழங்கிய வர்கள், தொண்டு நிறுவனங்கள், மூளை சாவு அடைந்தவர்களின் உறுப்பு தானம் அளித்த குடும்பத்தினர், காப்பீடு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரி, சிறந்த செவிலியர் அதிகாரி, அங்கன்வாடி ஊழியர்கள், ஆரோக்கிய குழந்தையின் பெற்றோர், சாலை விபத்து–களில் சிக்கியவர்களை தக்க நேரத்தில் மருத்துவ–மனையில் சேர்த்த தன்வார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
புதிய சந்திரயான் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த–பரிசோதனை, ரத்தசோகை, சர்க்கரை நோய், உடல் பருமன், காச நோய், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் வீடு தேடி வந்து சுகாதாரத் துறையினர் செய்ய உள்ள னர்.